“மலேசியா முதல் இந்தியா வரை” – தாயகம் திரும்பிய 300 பயணிகள்.!

Mission Vande Bharath
Image tweeted by India in Malaysia

வந்தே பாரத் திட்டத்தின் டிசம்பர் மாத சேவை நேற்று தொடங்கியது. கோலாலம்பூரில் இருந்து தமிழகத்தின் திருச்சி மற்றும் தலைநகர் டெல்லிக்கு 310 பயணிகள் வந்தடைந்தனர். (Mission Vande Bharath)

இந்நிலையில் நேற்று வியாழக்கிழமை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னை, பெங்களூரு மற்றும் கொச்சி ஆகிய பகுதிகளுக்கு மக்கள் வந்துள்ளனர். (Mission Vande Bharath)

“தொடர்ந்து முன்னிலையில் சிலாங்கூர்” – ஒரே நாளில் 11 பேர் உயிரிழப்பு.!

மலேசியாவில் இருந்து இரண்டு சிறப்பு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இதற்காக இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் முதல் பல நாடுகளில் இருந்து இந்தியர்களை தாயகம் அழைத்துச்சென்று வருகின்றது அண்டை நாடான இந்தியா.

அதே சமயம் குறிப்பிட்ட பட்டியலை தாண்டி சில பயணிகள் வந்தே பாரத் மூலம் செயல்படும் சிறப்பு விமானங்கள் வழியாக இந்தியா திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று டிசம்பர் 3ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னை, பெங்களூரு மற்றும் கொச்சி ஆகிய நகரங்களுக்கு 300 பேர் பயணம் செய்துள்ளனர்.

அண்டை நாடான இந்தியாவில் இருந்து மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு லட்சக்கணக்கான மக்கள் வியாபாரம் மற்றும் வேலை நிமிர்தமாக வருகின்றனர்.

தற்போது உலக முழுக்க நிலவி வரும் இந்த இக்கட்டான சூழலில் பலர் வேலை இழந்து தாயகம் திரும்பி வருகின்றனர்.

அதே சமயம் வேலை மற்றும் வியாபாரம் நிமிர்தமாக இங்கு (மலேசியாவில்) வசித்தவர்களும் தாயகம் திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது இந்தியாவில் இருந்து மீண்டும் பிற நாடுகளுக்கு விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்கியுள்ளது. (Mission Vande Bharath)

மலேசியா, சிங்கப்பூர், பக்ரின் உள்ளிட்ட நாடுகளுக்கு பாயிண்ட் டு பாயிண்ட் சேவையை மட்டும் தற்போது அளித்து வருகின்றது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram