மலேசியாவில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்..? – அமைச்சர் முஸ்லீமின் யஹயா

Malaysia Schools

மலேசியாவில் பள்ளிகள் திறப்பதை குறித்து இன்று முடிவு செய்ய உள்ளதாக துணை கள்வி அமைச்சர் முஸ்லீமின் யஹயா தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்படுள்ளது. ஜூன் மாதம் 10 முதல் ஆகஸ்ட் மாதம் 31 வரை மலேசியாவில் மீட்சிக்கான நடமாட்ட ஆணையின் கீழ் படி படியாக பள்ளிகள் திறக்கப்படும் என்று கடந்த ஞாயிறு அன்று மலேசிய பிரதமர் அறிவித்ததன் அடிப்படையில் இந்த முடிவை அமைச்சர் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.

பள்ளிகளை திறப்பதற்கு முன்பு அனைத்து பள்ளிகளிலும் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நேற்று அறிவித்தார். மலேசியாவில் கடந்த சில வாரங்களாக நோய் தொற்றின் அளவு குறைத்து வருவதால் பொருளாதர தரத்தை அதிகரிக்க அண்மையில் மலேசியாவில் பல பொருளாதார துறைகள் திறக்கபட்டடது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மலேசியாவில் பள்ளிகள் திறப்பாது குறித்து இன்று எடுக்கப்பட உள்ள முடிவு பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது கூறிபிடத்தக்கது. துணை கள்வி அமைச்சர் முஸ்லீமின் யஹயா இன்று மதியம் பள்ளிகள் திறப்பது குறித்து அறிக்கையை வெளியிடுவர் என்று எதிர்பார்க்கபடுகிறது.