‘கொரோனாவிற்கு எதிரான போர்’ – மலேசியா வந்த சீனா மருத்துவ நிபுணர்கள்

china team in malaysia

கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மலேசிய மீண்டும் வரும் இந்த நேரத்தில், சீரடையும் வேகத்தை இன்னும் அதிகரிக்க சீனாவில் இருந்து மருத்துவக் குழு மலேசியா வரவுள்ளதாக சில தினங்களுக்கு முன்பு மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் சீன அரசாங்கத்தால் அனுப்பப்பட்ட மருத்துவ நிபுணர்கள் குழு கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 18) அன்று மலேசியா வந்துள்ளனர்.

எட்டு பேர் கொண்ட இந்த நிபுணர் குழுவை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த மலேசியாவிற்கான சீனத் தூதர் பாய் தியான் மற்றும் மலேசியாவின் சுகாதார அமைச்சக அதிகாரிகள் வரவேற்றனர். நிபுணர்க் குழு மலேசியாவில் இரண்டு வாரங்கள் தங்கியிருப்பார்கள் என்றும், மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தங்களுடைய அனுபவத்தையும் நிபுணத்துவத்தையும் மலேசிய சகாக்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேஷியா எடுத்துள்ள கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான இந்த முயற்சி பெரிய அளவில் உதவக்கூடும் என்று சீனத் தூதர் தெரிவித்தார். ஏற்கனவே நல்ல முறையில் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் இந்த மருத்துவக்குழுவின் வருகை பலருக்கும் நிம்மதி அளித்துள்ளது.