இசை மழையில் உங்களை மூழ்கடிக்க – “கோலாலம்பூரில் மேஸ்ட்ரோ இளையராஜா லைவ்” : முழு விபரம் உள்ளே

ilayaraja

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே… ஆம் அவர் இசையின் இறைவன் தான். உலக புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் மற்றும் பாடலாசிரியர் இளையராஜா மார்ச் 14 அன்று மைடெக் (மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையம்) இல் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களை உற்சாகப்படுத்த உள்ளார். “கோலாலம்பூரில் மேஸ்ட்ரோ இளையராஜா லைவ்” என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி நான்கு மணிநேர இசை களியாட்டமாக இருக்கும், இது அவரது கிட்டத்தட்ட ஐந்து தசாப்த கால வாழ்க்கையை விவரிக்கிறது என்றும் கூறலாம்.

மேற்கத்திய இசை நுணுக்கங்களை பாடல்களாக இணைப்பதன் மூலம் தென்னிந்தியாவில் திரைப்பட இசைக்கு ஒரு போக்கை அமைத்த பெருமைக்குரியவர் இசைஞானி இளையராஜா. தமிழைத் தவிர, இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் இசை இயக்குநராக பணியாற்றியுள்ளார் அவர்.

பண்ணைபுரம் என்ற ஊரை சேர்ந்த 76 வயதான அந்த கலைஞர் சுமார் 1,000 க்கும் மேற்பட்ட இந்திய திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் மற்றும் 7,000 பாடல்களை இயற்றியுள்ளார். 1976 ஆம் ஆண்டில் அன்னகிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானதிலிருந்து, இன்று வரை அவர் இசை திக்கெட்டும் ஒலித்துக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் தற்போது மார்ச் 14ம் தேதி மைடெக் (மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையம்) இல் நடைபெற இருக்கும் இந்த நிகழ்ச்சியில் இளையராஜா அவர்களுடன் பின்னணி பாடகர்களான சுர்முகி, விபாரி, மது பாலகிருஷ்ணன், முகேஷ், பிரியா ஹிமேஷ், அனிதா மற்றும் பவதாரணி ஆகியோரும் இணைகின்றனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்க உங்கள் டிக்கெட்டுகளை www.airasiaredtix.com என்ற இணையதள முகவரி மூலம் பெறலாம் அல்லது மேலும் விவரங்களுக்கு 012-2000505 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

குறிப்பு: தற்போது மலேசியாவை கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தி வருவதால், இந்த நிகழ்வின்போது மண்டபத்தின் நுழைவாயிலில் மற்றும் இசை நிகழ்ச்சிகள் திரையிடப்படும் மண்டபம் முழுவதும் பல்வேறு இடங்களில் கை சுத்திகரிப்பு மருந்துகள் கிடைக்கும். உடல்நிலை சரியில்லாதவர்கள் முகமூடி அணிய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.