எம்.ஏ.எஸ் சிறப்பு விமானம் – இந்திய பிரஜைகள் தாயகம் திரும்ப மலேசியா ஏற்பாடு..!!

Indians in Malaysia
Photo Courtesy : indiatoday.in

உலகம் முழுவதையும் கலங்கடித்து வரும் கொரோனா காரணமாக உலகமே ஸ்தம்பித்து உள்ளது என்றால் அது மிகையல்ல. இந்த நோயின் காரணமாக பொதுப்போக்குவரத்து குறிப்பாக விமானம் மற்றும் ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பன்னாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் மலேசியாவில் சுற்றுலா மற்றும் வேலை காரணமாக இந்தியாவில் இருந்து வந்தவர்கள் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மலேசியாவில் உள்ள கே.பி.எஸ் பயண நிறுவனத்தின் நிர்வாக தலைவர் தலைமையில் சில தன்னார்வலர்கள் உதவியோடு அங்கு சிக்கியுள்ள இந்திய பிரஜைகள் வரும் சனிக்கிழமை எம்.ஏ.எஸ் சிறப்பு விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட உள்ளார். இந்த தகவலை வணக்கம் மலேசியா என்ற செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்த நோய் தொற்றுக்கு எதிராக மலேசிய அரசு மிக சிறந்த முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. நேற்று மலேசியாவில் புதிதாக 6 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.