கொரோனா குறித்து பரவும் வதந்தி – மலேசியாவில் ஒருவர் கைது  

rumors of corona

மலேசியாவில், ஆச்சதில் மக்களும் குழப்பத்தில் ஆட்சியாளர்களும் ஸ்தம்பித்து நிற்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது புதிதாக சீனாவில் இருந்து வந்த கொரோனா நோய் தொற்று. பல வகையில் இந்த கிருமி தங்களது நாட்டிற்குள் பரவிவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அரசு செயல்பட்டு வருகிறது. மலேசியா மட்டும் இன்றி ஆசிய நாடுகள் பலவற்றுள் இந்த நோய் கிருமி தொற்று காணப்படுகிறது.

மலேசியாவை பொறுத்தவரை சீனாவில் இருந்து குறிப்பாக வுஹன் மாகாணத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு பல வகை கட்டுபாடுகளை விதித்துள்ளது. நேற்று இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில் வுஹன் மாகாணத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு eVisa மற்றும் VoA எனப்படும் Visa On Arrival முற்றிலும் மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இப்படி வெளிநாட்டில் இருந்து வரும் நோய் தொற்றை தடுக்க அரசு முயற்சி எடுக்கும் நிலையில், உள்நாட்டில் சிலர் வதந்தி என்ற பெயரில் மக்களை பியமுருதி வருகின்றனர்.

நேற்று மலேசியாவின் பாங்கியில் 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரை மாலை நான்கு மணியளவில் மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர். இந்த நிகழ்வு குறித்து (MCMC) என்று அழைக்கப்படும் “The Malaysian Communications and Multimedia Commissison” நிறுவனம் கூறும்போது, பரவி வரும் வைரஸ் குறித்து மக்கள் பீதியில் உறைந்திருக்கும் நிலையில் அந்த நோய் குறித்த வதந்திய தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்ட ஒருவரை கைது செய்துள்ளதாகவும்.

சட்டம் 233ன் கீழ் அந்த நபருக்கு சுமார் 50,000 மலேசிய ரிங்கட் வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவித்தது. இது போன்ற வதந்திகளை பரப்புபவர்கள் மீது சட்டம் 505ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டு வருட சிறை தண்டனையும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தது. இது போன்ற கடுமையான தண்டனைகளே இந்த குற்றங்களை குறைக்கும் என்றும் MCMC நிறுவனம் தெரிவித்தது