‘மலிண்டோ நிறுவனம் ஆட்குறைப்பு செய்யும் முன் ஊதியத்தை வழங்கவேண்டும்..?’ – NUFAM மலேசியா

malindo air

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி முதல் மலேசியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது, இந்நிலையில் அதற்கு முன்பாகவே அங்கு போக்குவரத்துக்கு சேவை முடக்கப்பட்டது. உலகின் பல பகுதிகளில் இந்த தடை தற்போது வரை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த மலிண்டோ விமான சேவை நிறுவனம் தன்னிடம் பணியாற்றும் சுமார் 1000 தொழிலாளர்களை சுய விருப்பத்தை அடிப்படையாக கொண்டு ஆட்குறைப்பு செய்வதற்கு முன்பாக அவர்களுக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்று NUFAM தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் சில ஊழியர்களை மார்ச் 18ம் தேதி ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே வேளையில் இருந்து நீக்கிவிட்டதாகவும் புகார்கள் வந்துள்ளன என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது. அதே சமயம் இன்னும் சில ஆண்டுகளுக்கு வேலை உடன்பாடு இருக்கும் நிலையில் தற்போது நிலவும் இந்த இக்கட்டான சூழலை காரணம்காட்டி அவர்களை வேலையை விட்டு அனுப்பியுள்ளதாகவும் புகார்கள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் ஆட்குறைப்பு என்ற விஷயத்திற்கு வரும் முன்பு மலிண்டோ நிறுவனம் ஊழியர்களுக்கு ஊதியத்தை கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.