ஸ்ரீநகர் – இணைய சேவை இல்லாமல் தவித்த மலேசியா சுற்றுலா பயணிகள்

malaysian tourists

கடந்த டிசம்பர் 11ம் தேதி மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலா வந்த சிலர் கடந்த முன்று நாட்களுக்கும் மேலாக தங்கள் குடும்பத்துடன் தொடர்புகொள்ள முடியாமல் தவித்துள்ளனர். மலேசியாவில் இருந்து எட்டு பேர் கொண்ட குழு இந்தியாவிற்கு சுற்றுலாவுக்காக  வந்த நிலையில் அதில் முவர் தங்கள் தாயகம் திரும்ப மமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா விதித்துள்ள சட்டத்தால் காஷ்மீரில் பல பகுதிகளில் இணையதள சேவை இன்று வரை வழங்கப்படவில்லை, இந்நிலையில் அங்கு சென்ற மலேசிய சுற்றுலா பயணிகள் தங்களின் நிலை குறித்த விவரங்களை தாயகத்தில் உள்ள தங்களது சொந்தகளுக்கு தெரிவிக்கமுடியாமல் தவித்துள்ளனர். அதிலும் குறிப்பாக இரண்டு சிறு குழந்தைகளை கொண்டு ஒரு பெண்மணி தன்னுடைய குழந்தைகளுடன் உரையாட முடியாமல் தவித்துள்ளார்.

கடும் சிரமத்திற்கு பிறகு இந்த சுற்றுலா பயணிகளை அழைத்துவந்த சுற்றுலா உதவியாளர் முயற்சியால் ஸ்ரீநகரில் உள்ள அரசு உருவாக்கிய தொலைதொடர்பு நிலையத்தை அவர்கள் வந்து சேர்ந்தார். அதன் பின் அந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் தங்கன் குடுபத்துடன் மனமுருக உரையாடினார். மேலும் நேற்று தாயகம் செல்வதற்காக அவர்கள் டெல்லி செல்லவிருந்த நிலையில், அவர்களுக்கு மேலும் ஒரு இடையுறு ஏற்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் நிலவும் கடும் பனி பொலிவால் அங்கு விமான சேவை நிருதப்படுள்ளது. ஆகையால் இந்த நிலை சரியாகும் வரை அவர்கள் பாத்திரமாக ஸ்ரீநகரில் தங்கவைகப்படுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன.