மீண்டும் ட்விட்டரில் இருந்து வெளியேறிய மலேசிய ராணி – சோகத்தில் மக்கள்  

Malaysian Queen

சமூக வலைதளங்களில் பிரபலமானது ட்விட்டர், அதிலும் பிரபலங்களின் ட்விட்டர் கணக்கு என்றால் அது இன்னும் பிரபலம். ஆனால் சிலசமயம் பிரபலங்கள் தங்களின் ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியேறும்போது பல விசிறிகளுக்கு அது சோகத்தை ஏற்படுத்துகின்றது, இந்த வரிசையில் தற்போது மலேசியாவின் ராணி தனது ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியேறி இருப்பது அனைவைரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் பயன்படுத்தி வந்த ‘Che Minah Sayang’ என்ற கணக்கு தற்போது அமைதியாக உள்ளது. அந்த கணக்கை தேடி சென்றபோது அப்படி ஒரு கணக்கு இல்லை (This Account doesn’t exist) என்று கட்டுவது பலரை சோகத்தில் ஆள்தியுல்லாது. ஏற்கனவே ராணி ஒரு முறை தனது ட்விட்டர் கணக்கை நிறுத்தி விட்டு சில மாதங்கள் கழித்து அதை மீண்டும் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இரண்டாவது முறையாக ராணி தனது ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியேறி இருப்பது வருத்தமளிப்பதாக அவரை ட்விட்டரில் பின் தொடர்வோர் கூறுகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ராணி தனது ட்விட்டர் கணக்கை விட்டு வெளியேறிய சில மணி நேரத்தில், ட்விட்டர் பயன்படுத்தும் ஒருவர், ராணியிடம் ‘உங்களை பற்றி கருத்து கூறியதற்கு என்னை மனிக்கவும்’ (என்ன கருத்து என்று குறிப்பிடவில்லை) என்று குறிப்பிட்டார். அதே சமயம் அப்போது மலேசியாவில் #AmpunTuanku ‘எங்களை மன்னித்துவிடுங்கள் ராணி’ என்ற ஹஷ்டக் பிரபலமானது. அதன் பின் ராணி மீண்டும் தனது கணக்கை தொடங்கவே மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ராணி இந்த முறையும் தனது ட்விட்டர் கணக்கை விடு வெளியேற என்ன காரணம் என்று இது வரை எந்த அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.