அமைச்சரவை பட்டியல் – மலேசிய பிரதமர் இன்று வெளியிடுவதாக தகவல்

Muhyiddin list

மலேசியாவை பொறுத்தவரை அரசியல் குழப்பம், பாமாயில் பிரச்சனை, கொரோனா என்று பல விஷயங்கள் அந்த நாட்டை ஒரு சிரமமான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளது. கடந்த மாதம் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முஹமது தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கான தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் மலேஷியா மன்னரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் அவரது ராஜினாமாவை ஏற்ற மலேஷியா அரசர் அடுத்த பிரதமர் பதவி ஏற்கும் வரை மகாதீர் அவர்களே ஆட்சி பொறுப்பில் இடைக்கால பிரதமராக பணியாற்ற கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் மகாதீர் அவர்களுக்கு அதிக பெருன்பான்மை இருந்ததாக கூறிய நிலையில் புதிய பிரதமராக திரு. முகிதீன் யாசினை அறிவித்தார் மலேசிய மன்னர். இந்த நிகழ்விற்கு பிறகு தான் மன்னரை சந்திக்க சென்றதாகவும் ஆனால் அவர் தன்னை சந்தித்த மறந்துவிட்டதாகவும் முன்னாள் பிரதமர் மகாதீர் தெரிவித்தார். இந்த பிரச்சனை ஒருபுறம் இருக்க இன்று மலேசியாவின் பிரதமர் முகிதீன் யாசின் இன்று அமைச்சரவை பட்டியலை இன்னும் சில மணி நேரத்தில் அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிரதமர் அலுவலகத்தில் இருந்து வரும் அறிக்கையின்படி மலேசிய பிரதமர் இன்று மலேஷியா மன்னரை சந்தித்து இந்த பட்டியலை கொடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “அகோங்கின் ஒப்புதலைத் தொடர்ந்து, பிரதம மந்திரி பட்டியலை இன்று மாலை 5 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள அவரது அலுவலகத்தில் அறிவிப்பார்” என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று பிரதமர் அலுவலக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது