“கொரோனா – மலேசிய மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” – சுகாதாரத்துறை அமைச்சர்

Datuk Seri Dzulkefly Ahmad'

நேற்று செய்தியாளர்களை சந்தித்த மலேசிய சுகாதாரத்துறை அமைச்சர் Datuk Seri Dr. Dzulkefly bin Ahmad, செவ்வாய்க்கிழமை நிலவரப்படி இதுவரை மலேசியாவில் 22 பேர் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மக்கள் இந்த நோய் குறித்து அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் கூறினார்.

மேலும் Johns Hopkins University வெளியிட்டுள்ள தகவலின் படி, கொரோனா நோய் தொற்று உள்ள இடங்களில், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் மலேசியா உள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த நோய் தொற்றால் இதுவரை இந்தத் இறப்பும் ஏற்படவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து பேசிய சுகாதார துறை அமைச்சர், சிகிச்சை பெற்றுவரும் பலர் நல்ல முறையில் உடல்நிலை தேறிவருவதாகவும், உயிர் இழப்புகள் இல்லை என்றபோதும் அரசு இந்த கொரோனா விஷயத்தில் மிகவும் கவனத்துடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே இந்த நோயால் பாதிக்கபட்டு பலர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதை நினைவுபடுத்திய அமைச்சர், மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டுமே தவிர அச்சப்பட தேவையில்லை என்று தெரிவித்தார்.