மலேசியர்கள் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் – மகாதீர் முகமது

malaysian president

மலேசியாவின் பெட்டாலிங் ஜெயா என்ற நகரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த மலேசியா நாட்டு பிரதமர் மகாதீர் பின்வருமாறு கூறினார், மலேசியர்கள் நன்றி உணர்வோடு இருக்க வேண்டும் என்று தனது உரையை தொடங்கினார் அவர். மலேசியா நாட்டில் மக்கள் இடையே நிலவும் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் மற்றும் வலுவான சுதந்திர பொருளாதார நிலைக்கும்  மலேசிய மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

மலேசிய நாட்டின் பெருமையே, நாட்டிற்குள் ஜாதி, மத பேதங்களை சொல்லி மக்களை துண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் சில புல்லுருவிகளை கண்டு அஞ்சாமல் அவர்களின் எண்ணங்களை தவிடுபொடியாக்கி சிறந்த நாடக திகழ்வதே என்று தெரிவித்தார்.  இறையாண்மையை பெரிதாக கருதி மத கலவரங்களுக்கும் போர்களுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்கின்ற நிலைக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

மலேசிய நாட்டின் பொருளாதார வளர்ச்சி சுமார் 4.3 சதவிகிதத்தில் இருந்து 4.8 சதவிகிதம் வரை வளர்ந்துள்ளது பெருமைக்குரிய விஷயம் என்றும், பிற ஆசிய நாடுகளை ஒப்பிடும் போது மலேசிய தான் பொருளாதார வளர்ச்சியில் முதலிடம் வகிக்கின்றது என்று அவர் தெரிவித்தார். நிலையான பொருளாதாரம் மற்றும் திறமைவாய்ந்த மக்களை கொண்ட நாடு என்பதால் இங்கு பிற நாடுகளின் முதலீடாலர்கள் அதிகமாகி உள்ளது அனைவரும் அறிந்ததே என்றார் அவர்.

2018ம் ஆண்டு முழுவதும் மலேசியா பெற்ற வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அளவை கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதத்திற்குள் மலேசியா பெற்றுவிட்டது மிக பெரிய சாதனை என்றும் அவர் தெரிவித்தார்.