‘மலேசியாவில் கூடும் நாடாளுமன்ற அமர்வு’ – கொரோனா சோதனைக்கு பின்னரே அனுமதி

Malaysian paliment

வரும் மே 18ம் தேதி மலேசியாவில் நாடாளுமன்ற அவை கூட உள்ளது. ஆனால் தற்போது நிலவும் கொரோனா அச்சத்தால் அமர்வில் கலந்துகொள்ளும் அனைவரும் கட்டாயம் மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கொரோனா குறித்த சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிய அந்த இரண்டு நாட்களிலும் பாராளுமன்ற கட்டிட வளாகத்தில் இந்த சோதனைக்கு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சோதனையை தனியார் மருத்துவ நிலையங்களில் மேற்கொள்ள விருப்பினால், அவர்கள் தங்கள் சொந்த செலவில் அந்த பரிசோதனையை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரவிருக்கும் இந்த நாடாளுமன்ற அவையில் பங்கேற்கும் அனைவரும் கட்டாய சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும். சோதனைக்கு உட்படாதோர் கட்டாயம் அவையில் அனுமதிக்கப்படமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.