ராஜினாமா செய்த மலேசிய பிரதமர் – கடிதத்தை ஏற்ற மலேசிய அரசர்

Malaysia King

மலேசிய அரசியல் சூழ்நிலை கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே பல திருபங்களுடன் தான் அரங்கேறிவருகின்றது. இந்நிலையில் திடீர் என்று தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார் மலேசிய பிரதமர் டாக்டர் மகாதீர் பின் முஹமது. தனது ரஜினமான குறித்த கடிதத்தை மலேசிய அரசர் Al- SultanAbdullah Ri’ayatuddinக்கு அனுப்பினர்  மகாதீர். இந்நிலையில் அந்த கடிதத்தை தற்போது ஏற்றுக்கொண்டுள்ளார் மலேசிய அரசர் Al- SultanAbdullah Ri’ayatuddin.

பிரதமரின் ராஜினாமா கடிதத்தை எற்றுகொண்டபோதும், மலேசியாவிற்கான அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை டாக்டர் மகாதீர் பின் முஹமது அவர்களே இடைக்கால பிரதமராக நீடிப்பார் என்று மலேசிய அரசர் தெரிவித்துள்ளார். டாக்டர் மகாதீர் நேற்று மாலை சுமார் ஐந்து மணி அளவில் மணியளவில் அரசரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இந்த தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் தனது ராஜினாமா கடிதத்தை அரசரிடம் பிரதமர் கொடுத்ததிற்கு பிறகு 26 நாடாளுமன்ற உறுபினர்களைக் கொண்ட மகாதீரின் பிரிபூமி பெர்சாத்து மலேசியா கட்சி பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மலேசிய பாராளுமன்றத்தில் தற்போது பக்கத்தான் ஹரப்பான் கூட்டணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.