“பாமாயிலுக்கு வெள்ளை சர்க்கரை” – இந்தியாவை சமாதான படுத்துகிறதா மலாசியா ?

white sugar

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே மலேசிய அரசுக்கு பல இன்னல்கள் வந்துகொண்டு இருக்கிறது, குறிப்பாக பல அரசியல் குழப்பங்களை சந்தித்து வரும் பிரதமர் மகாதீர் அவர்களுக்கு பெரும் இடியாக அண்மையில் வந்து விழுந்தது, இந்திய அரசு மலேசியா மீது விதித்த பாமாயில் தடை.

இதற்கு இன்று வரை விடை காணமுடியாமல் மலேசிய அரசு தவித்து வருகிறது. இந்தியாவில் உள்ள காஷ்மீர் மற்றும் அந்நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்தும் ஆகியவற்றை பற்றி தனது கருத்தை மலேசிய பிரதமர் வெளிபடுத்திய பிறகே இந்த தடை ஏற்பட்டது என்று பரவலாக பேசப்படுகிறது.

இந்தியாவை எதிர்க்கும் அளவுக்கு நாங்கள் பெரிய நாடு அல்ல என்று அண்மையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மகாதீர் தெரிவத்தார், இருப்பினும் தனது கருத்தில் இருந்து அவர் மாறப்போவதில்லை என்றும் அவர் முன்பே கூறியிருந்தார். இந்நிலையில் மலேசியா ஒரு புதிய முடிவினை எடுத்துள்ளது.

சென்ற ஆண்டு 2019 வரை சுமார் 88,000 டன் வெள்ளை சர்க்கரையை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துவந்த மலேசியா இந்த ஆண்டு சுமார் 130,000 டன் வெள்ளை சர்க்கரையை இறகுமதிசெய்ய திட்டம் வகுத்துள்ளது. இந்த ஆளவு சர்க்கரையின் மதிப்பு 200 மில்லியன் ரிங்கட் என்றும், அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 49 மில்லியன் டாலர் என்றும் கூறப்படுகிறது.

இது பாமாயில் சர்ச்சையில் இந்தியாவை சமாதான படுத்த மலேசியா எடுக்கும் நடவடிக்கை என்று சிலர் கூறினாலும், இது தொடர்பான எந்த அறிக்கையும் மலேசிய அரசால் தற்போது வரை வெளியிடப்படவில்லை. ஒருவேளை இது சமாதான நோக்கில் செய்யப்பட்டதாக இருப்பின் இந்திய அரசு விரைவில் பாமாயில் தடைக்கு விடைகான பேச்சுவார்த்தைக்கு தயாராக வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.