மலேசியா : ‘முகநூலில் தொடங்கப்பட்ட ரமலான் பஜார்’ – குழுவில் குவியும் வர்த்தகர்கள்

ramadan bazzar

மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதிருந்து பல வர்த்தக நிறுவனங்கள் முழு அடைப்பில் உள்ளது. இந்த ஆண்டு கொரோனா காரணமாக எப்போதும் நடக்கும் ரமலான் பஜாருக்கு தடை விதிக்கப்பட்டது. எளிதில் அடுத்தவருக்கு பரவும் இந்த கொரோனா காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது மலேசியா முழுமைக்கும் அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போது Facebook எனப்படும் முகநூல் வழியாக ரமலான் பஜார் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மலேசியா இன்று என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில். திரங்கானு ஆன்லைன் ரமலான் பஜார் என்ற குழுவில் தற்போது சுமார் 25,000இங்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர் என்றும். அதேபோல, மூவார் ரமலான் என்ற ஆன்லைன் பஜார் குழுவில் சுமார் 14,000-க்கும் அதிகமான உறுப்பினர்கள் தற்போது உள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

அது மட்டும் இல்லாமல் இந்த முகநூல் குழுக்கள் இந்த ஏப்ரல் மாதம் தொடக்கத்தில் (பொது நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் உள்ள நேரத்தில்) தான் துவங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது ஒருபுறம் இருக்க கடந்த ஏப்ரல் 16ம் தேதி அன்று மலேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப், இ-ஹெயிலிங் உட்பட எந்த ஒரு ரமலான் பஜாரும் தொடங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்று அறிவித்தார்.

அனால் அவர் அறிக்கை வெளியிட்ட அடுத்த நாளே சிலாங்கூரின் மந்திரி புசார் அமிருதின் ஷாரி அவர்கள் ரமலான் இ-பஜார் தடையின்றி செயல்படுத்தப்படும் என்று கூறினார். இந்த இக்கட்டான சூழலில் இணையத்தில் இந்த ரமலான் பஜார் நடத்துவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும் என்று நம்பப்படுகிறது.