மலேசிய அரசியல் – பிரதமர் வெளியிட்ட அமைச்சர்கள் பட்டியல்

Muhyiddin-Yassin-

பல அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், மலேசியாவின் பிரதமர் முகிதீன் யாசின் இன்று அமைச்சரவை பட்டியலை இன்னும் சில மணி நேரத்தில் அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகின. பிரதமர் அலுவலகத்தில் இருந்து வரும் அறிக்கையின்படி மலேசிய பிரதமர் இன்று மலேஷியா மன்னரை சந்தித்து இந்த பட்டியலை கொடுப்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது.

“அகோங்கின் ஒப்புதலைத் தொடர்ந்து, பிரதம மந்திரி பட்டியலை இன்று மாலை 5 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள அவரது அலுவலகத்தில் அறிவிப்பார்” என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அந்த பட்டியல் வெளியாகி உள்ளது. மலேஷியா இன்று என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த பட்டியல் பின்வருமாறு..

சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக – அஸ்மின் அலி
பாதுகாப்பு அமைச்சராக – இஸ்மாயில் சப்ரி யாகோப்
பொதுப்பணி துறை அமைச்சராக – ஃபடில்லா யூசோஃப்
கல்வி அமைச்சராக – முகமட் ராட்ஸி எம்.டி ஜிதின் திம்பலன்
நிதி அமைச்சராக – துங்கு டத்தோ ‘ஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ்
சுற்றுச்சூழல் அமைச்சராக – டத்தோ துவான் இப்ராஹிம் பின் துவான் மேன்
மனிதவள அமைச்சராக – டத்தோ சரவணன் முருகன்