மலேசியாவின் எட்டாவது பிரதமர் – தனது அரசு பணிகளை தொடங்கினார்

Muhyiddin-Yassin-

கடந்த இரண்டு வாரமாக மலேசியாவில் நிலவி வந்த அரசியல் குழப்பங்கள் நேற்று புதிய பிரதமர் பதவி ஏற்றதும் முடிவுக்கு வந்தது. நேற்று மலேசிய நாட்டின் எட்டாவது பிரதமராக தன்னுடைய பணியை தொடங்கினார் முகிதீன் யாசின். சரியாக காலை எட்டு மணிக்கு முகிதீன் யாசின் பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்தார் அங்கு அவரை வரவேற்க மலேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் முகமட் ஜுகி அலி சிறப்பான முறையில் வரவேற்றார்.

இந்நிலையில் புதிய பிரதமர் பதவி ஏற்றத்தை அடுத்து, இடைக்கால பிரதமராக பணியாற்றிவந்த முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது தனது பொறுப்பில் இருந்து முழுமையாக ராஜினாமா செய்தார். இதன் பின்னர் புதிய பிரதமர் தனது அலுவலகத்திற்கு வந்து அவருக்கு உரிய வருகை பதிவேட்டில் கையொப்பம் இட்டார். 72 வயதான புதிய மலேசிய பிரதமர் முகிதீன் நேற்று அரண்மனையில் மலேசிய பேரரசர் யாங் டி-பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா அவர்களின் முன்னிலையில் மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவியேற்றார்.

மேலும் மலேசிய மத்திய அரசியலமைப்பின் பிரிவு 40 (2) (a) மற்றும் பிரிவு 43 (2) (a) ஆகிய பிரிவின் படி முகிதீனின் நியமனத்தை சுல்தான் அப்துல்லா வழங்கினார்.