“சுயதொழில் செய்வோருக்கு சிறப்புச் சலுகை” – இஸ்மாயில் சபரி யாக்கோப்.!

PKPP in Perak
Picture Courtesy Astro Awani

மலேசியாவில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகின்றது. ஆகையால் தற்போது மலேசியாவில் பல இடங்களில் இயக்கக்கட்டுப்பாடு அமலில் உள்ளது. (Malaysia Lockdown)

மலேசியாவில் இயக்கக்கட்டுப்பாடு அமலில் உள்ள இடங்களில் பல நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது (Malaysia Lockdown).

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளுக்கு வேலை பெர்மிட்..?

இருப்பினும் மருத்துவம், உணவு போன்ற அத்யாவசிய தேவைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுயதொழில் செய்வோர் மாநிலம் கடந்து பயணிக்க காவல்நிலையில் அனுமதி பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சுயதொழில் செய்வோர் மாநிலம் கடந்து பயணிக்க விரும்பினால், காவல் நிலையத்தில் அவர்கள் பதிவு செய்து பயணிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்று மலேசியாவில் ஒரே நாளில் மேலும் 799 பேருக்கு தொற்று பரவியுள்ளது. இதனால் தற்போது மலேசியாவில் பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் நேற்று மலேசியாவில் 3 பேர் கொரோனா காரணமாக மரணித்த நிலையில் மலேசியாவில் இறப்பு எண்ணிக்கை 249ஆக உயர்ந்துள்ளது.

அதே சமயம் நேற்று மலேசியாவில் 491 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக நாள் ஒன்றுக்கு 400-க்கும் மேற்பட்டோர் குணமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram