கொரோனா : மலேசியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4800-ஐ தாண்டியது

malaysia corona

தற்போது உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா காரணமாக ஐரோப்பிய நாடுகள் நிலைகுலைந்து உள்ளன. உலகின் வல்லரசு நாடான அமேரிக்காவில் இதுவரை 21,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர். சுமார் 5.3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோய் தொற்று தொடங்கிய நாள் முதல் WHO எனப்படும் உலக சுகாதார மையம் மற்றும் worldometers.info என்ற இணையதளம் ஒன்றும் உலக அளவில் கொரோனா குறித்த அறிக்கை வெளியிட்டு வருகின்றது.

இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரை இந்த நோயின் காரணமாக உலக அளவில் சுமார் 18.5 0லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த நோய் தாக்கி இதுவரை உலக அளவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுமார் 4,56,736 பேர் இந்த கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேப்போல அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மலேசியாவில் இதுவரை சுமார் 4800-க்கும் அதிகமான மக்கள் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல இந்த நோயின் காரணமாக மலேசியாவில் 70-க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.