மலேசிய கம்யூனிகேஷன்ஸ் & மல்டிமீடியா கமிஷன் – ஒருவருக்கு கொரோனா தொற்று

mcmc

மலேசியாவில் இயங்கி வரும் மலேசிய கம்யூனிகேஷன்ஸ் அண்ட் மல்டிமீடியா கமிஷன் (எம்.சி.எம்.சி) தனது ஊழியர்களில் ஒருவருக்கு தற்போது கொரோனா தொற்று இருப்பதாய் உறுதி செய்துள்ளது. Free Malaysia Today என்ற பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் நிறுவனத்தை சார்ந்த ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று இருக்கிறது என்றும் அவர் தற்போது சுங்கை புலோவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் சிகிச்சை பெற்று வரும் அந்த நபரின் உடல் நிலை சீராக உள்ளதென்றும் அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் அந்த நபருடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அனைவருக்கும் தற்போது சோதனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவ்வாறு அடையாளம் காணப்படுபவர்கள் தனிமை படுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கிப்படுகிறது.

“மேலும் தற்போது இந்த சோதனையில் அடையாளம் காணப்பட்டவர்கள் அவர்களின் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர், அவர்கள் அனைவரும் இன்று மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.” மேலும் இந்த நிகழ்வினால், அனைத்து எம்.சி.எம்.சி மாநில அலுவலகங்களிலும் பிரதான நுழைவாயிலில் கட்டாய உடல் வெப்பநிலை சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.