மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடு – தடையை மீறிய 8 பேர் கைது.?

lockdown

உலகம் முழுதும் 25000-கும் அதிகமான உயிரை பலிவாங்கியுள்ள இந்த கொரோனா நோய் தொற்றால் மலேசியாவில் கடந்த சில நாட்களாகவே நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமாக இந்த கொரோனா நோய் தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் மக்கள் அனைவரும் தேவையின்றி வெளியில் வராமல் பொது இடங்களில் கூட்டமாக சேர்வதை தவிர்ப்பதன் மூலமே இந்த நோய் பரவளின் அளவை தடுக்க முடியும் என்று அரசு அடிக்கடி அறிவுறுத்தி வருகின்றது.

இதற்காக விதிக்கப்பட்டது தான் இந்த நடமாட்ட தடை, ஆனால் அரசு விதித்த இந்த தடையை 3.12 கோடி மக்கள் தொகை உள்ள மலேசியாவில் சுமார் 30 லட்சம் மக்கள் பின்பற்ற மறுப்பதாக மலேஷியா ஆயுதப்படை அண்மையில் தெரிவித்தது. தற்போது நிலவி வரும் இந்த அசாதாரண சூழ்நிலையில் இந்த 30 லட்சம் மக்கள் என்ற எண்ணிக்கை மிகவும் அதிகம் என்றும் மக்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையை முழுமையாக புரிந்து கொண்டு அரசோடு ஒத்துழைக்குமாறும் ஆயுதப்படை வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று இந்த நடைமட்டக் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி நேற்று ஒரு நாளில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கள் தொடர்ந்து பொறுப்புணர்ச்சி இல்லாமல் இருப்பது வேதனை அளிப்பதாக உள்ளது.