“மலேசியாவில் ஒட்டுமொத்த நடமாட்ட தடை அல்ல” – மலேசிய பிரதமர் 

myuhudeen

உலக நாடுகளை பெரிய அளவில் அச்சுறுத்தி வருகின்றாது கொரோனா எனப்படும் கொடிய நோய் தொற்று, கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய இந்த நோய் தற்போது சுமார் நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் பரவி சுமார் ஆறு ஆயிரம் பேருக்கு மேல் கொன்றுகுவித்துள்ளது. தற்போது மலேசியாவில் அதிக அளவில் பரவி வரும் இந்த நோயை தடுக்க பெரிய அளவில் போராடி வருகின்றது மலேசியா அரசு.

இந்நிலையில் நேற்று மலேசியாவின் புதிய பிரதமர் மொஹிதீன் யாசின் மலேசிய நாட்டில் பொது நடமாட்ட தடையை விதித்து உத்தரவிட்டார். ஆனால் சிலர் இதை முழுமையான தடை உத்தரவு என்று கூறி வருகின்றனர். ஆனால் அப்படி ஒரு தடை விதித்தால் நீங்கள் வெளியில் நடமாட முடியாது, உணவு வாங்கக்கூட நீங்கள் வெளியில் செல்லமுடியாது என்று பிரதமர் தெரிவத்தார். தற்போது விதிக்கப்படிற்கும் தடை ஒரு முன்னெச்சரிக்கை தடை தான். இந்த நோய் மேலும் பரவாமல் இருக்க மேற்கொள்ளபட்டிருகிறது என்றார் அவர்.

அதே போல மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், மாணவர்கள் அதிகம் கூடும் பள்ளி மற்றும் கல்லூரிகள் என்றும் அனைத்தும் மூடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த தடை வரும் மார்ச் மாதம் 31 தேதி வரை அமலில் இருக்கும் என்று அரசு தரப்பில் இருந்து குறிபிடப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருட்கள் கொண்ட நிறுவனங்கள் அனைத்து திறந்தே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.