மகாதீர் – முஹிதீன் : இருவருக்கும் இடையே போட்டியா…?

mhathir

ஏற்கனவே கடும் குழப்பத்திற்கு மத்தியில் மலேஷியா அரசியல் களம் நகர்கின்றது. இந்நிலையில் அடுத்த பெர்சத்து கட்சியின் தலைவர் போட்டிக்கு தற்போது முன்னாள் மலேஷியா பிரதமருக்கும் இந்நாள் மலேசிய பிரதமருக்கும் போட்டி நிலவும் சூழல் உருவாகி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு நடந்த அரசியல் குழப்பதினால் ஏற்பட்ட பாக்காத்தான் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, மகாதீர் பின் முஹமது அவர்களின் கட்சி உறுப்பினர்களை அடித்தளமாய் கொண்டிராத பிறரை கொண்டு ஒரு புதிய அரசினை உருவாக்க பலர் விரும்பினார்.

இந்த நிலையில் பலருடைய முயற்சியால் தற்போதைய மலேஷியா பிரதமர் முகிதீன் வெற்றி பெற்று கடந்த மார்ச் ஒன்றாம் தேதி மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவி ஏற்றார் முகிதீன், மேலும் பெர்சத்து கட்சியின் தற்போதைய செயல் தலைவராக தான் பொறுப்பேற்றதன் மூலம் அந்த கட்சியை தனது கட்டுபாட்டிற்குள் கொண்டுவர அவர் நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளன என்று மலேஷியா இன்று செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் முன்னாள் பிரதமர் மகாதீர் பெர்சத்து கட்சியின் செயல் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். ஆனால் அக்கட்சி உறுப்பினர்கள் அவர் அந்த பதவியை ராஜினாமா செய்யாமல் மீண்டும் அந்த பதவியை ஏற்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆகையால் தற்போது கட்சி தலைவர் பதவிக்கு போட்டி உருவாகும் சூழல் உருவாகி உள்ளது.