மிரட்டும் கொரோனா.. தடைபடுமா மலேசிய தைப்பூச திருவிழா ?

stay for thaipusam

மலேசியாவை பொறுத்தவரை ஹிந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது தைப்பூசம், பத்து மலை பகுதியில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் தைப்பூச திருவிழாவின் போது லட்சகணக்கில் மக்கள் கூடுவர். மலேசியா மட்டும் இன்றி பிற நாடுகளில் இருந்து பல பக்தர்கள் இங்கு வந்து தைப்பூச விழா அன்று தங்களது பிரதனைகளையும், நேர்த்தி கடன்களையும் செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டும் பல லட்ச மக்கள் இங்கு கூடுவர் என்று எதிர்பார்க்கபடுகிறது, இந்த வருடம் வரும் பிப்ரவரி மாதம் எட்டாம் நாள் இந்த தைப்பூச திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. ஆனால் கடந்த சில வாரங்களாக உலகை அச்சுறுத்தும் கொரோனா நோய் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் உலக சுகாதார நிறுவனமான WHO எனப்படும் World Health Organization அறிவிப்பின்படி பொதுநிகழ்வு, சமயம் சார்ந்த திருவிழா என்று மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனால் பிப்ரவரி எட்டாம் நாள் நடக்கவிருக்கும் இந்த தைப்பூச திருவிழா தடைபடும் அபாயம் நிலவுகிறது, ஆனால் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள துணை பிரதமர் வான் இஸ்மாயில், நடக்கவிருக்கும் தைப்பூச விழாவிற்கு தற்போது வரை எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும், ஆனால் கட்டாயம் மக்களின் நலனுக்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறினார்.