மலேசியாவில் இறந்த இந்திய வாலிபர் – கொரோனா பாதிப்பா ? வதந்தியா ?

indian guy

கடந்த புதன் அன்று மலேசியாவின் ஜோஹோர் பகுதியில் உள்ள சுல்தானா அமினாஹ் என்ற மருத்துவமனையில் 22 வயதுடைய இந்தியாவின் திரிபுரா என்ற இடத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த இளைஞர் “Status Epilepticus Secondary Meningoencephalitis” என்ற ஒரு வகை நோய் பாதிப்பால் இறந்ததாகவும், அவர் கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறுவது வெறும் வதந்தி என்றும் அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

‘மனிர் ஹோசைன்’ என்று அழைக்கப்படும் அந்த இளைஞர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவிற்கு வேலைபார்க்க வந்ததாகவும் அவர் தற்போது கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறந்துவிட்டதாகவும் அந்த இளைஞரின் தாத்தா ‘அப்துல் ரஹீம்’ கூறியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது பேரன் கடந்த ஜனவரி 29 தேதி காலை 5.35 மணி அளவில் இறந்துவிட்டதாக தங்களுக்கு தகவல் கிடைத்தது என்றும் அவர் கூறினார்.

தனது பேரன் கொரோனா நோய் தொற்றால் தான் இறந்தார் என்று குடும்பதிர்னர் தெரிவிக்கும் நிலையில் மலேசியாவில் உள்ள அந்த மருத்துவமனை அதை முற்றிலும் மறுத்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள குடும்ப நலத்துறை அதிகாரி ராதா தேப்பர்மா, அந்த இளைஞரின் மரணம் குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலுக்கும் தற்போது வரை தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வுஹான் நகரில் இருந்து அழைத்துவரப்பட்ட இந்திய மாணவர்களில் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.