“இந்திய மாணவர்களின் கல்விக்கடனை ஏற்கும் சிலாங்கூர் அரசு”

Indian Students Selangor
Image Courtesy Malaysiaindru

மலேசியாவில் பயிலும் 150 இந்திய மாணவர்களின் கல்விக்கடனை ஏற்க உள்ளதாக சிலாங்கூர் அரசு தற்போது தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கணபதி ராவ் வெளியிட்டார். (Indian Students Selangor)

அரசிடம் அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் தங்களது படிப்பை தொடரும் மாணவர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Indian Students Selangor)

“ஜனவரி 8 2021” : திருச்சி – KL மற்றும் KL – திருச்சி சிறப்பு விமானம் இயக்கப்படும்.!

மாணவர்களின் குடும்ப வருமானம் மாதத்திற்கு RM2000-க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் இந்த கல்விக்கடனுக்கு மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கல்விக்கடன் மொத்தம் RM6,00000 மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் திரு. வி. கணபதி ராவ் தெரிவித்துள்ளார்.

பட்டய படிப்பை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு RM 3000 வழங்கப்படும் என்றும், பட்டதாரி மாணவர்களுக்கு RM 5000 வழங்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவு செய்யலாம், மேலும் உயர்கல்வி நிறுவனத்தின் அனுமதி கடிதத்தை சமர்ப்பிக்கலாம்.

சிலாங்கூர் அரசு மேற்கொண்டுள்ள இந்த நிகழ்வை மாணவர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மலேசியாவில் உச்சம் தொட்டு வந்த நிலையில் தற்போது சற்று குறைய தொடங்கியுள்ளது.

மேலும் இந்த இக்கட்டான சூழலில் மாணவர்களுக்கு கிடைத்துள்ள இந்த சலுகை பெரிதும் துணையாக இருக்கும்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram