‘மீண்டும் மலேசியாவுடன் பாமாயில் வர்த்தகத்தை தொடங்கிய இந்தியா..!!’

malaysia palm oil

சுமார் நான்கு மாத இடைவெளிக்கு பின்னர் தற்போது அண்டை நாடான இந்தியா மலேசியாவுடனான தனது பாமாயில் வர்த்தகத்தை மீண்டும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 4 மாதங்களுக்கு பிறகு மலேசியாவிடன் இருந்து இந்திய வணிகர்கள் பாமாயில் வாங்குவதை மீண்டும் தொடங்கியுள்ளனர். உள்நாட்டு சரக்குகளின் வீழ்ச்சி மற்றும் தள்ளுபடி விலைகள் ஆகியவற்றால் கொள்முதல் நிலை தூண்டப்பட்டுள்ளதாக வர்த்தக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னணி இந்திய இறக்குமதியாளர்கள் பலர் கடந்த வாரம் சுமார் 200,000 டன் அளவு வரையிலான பாமாயிலை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்துள்ளனர் என்று பிரபல இந்திய நாளிதழான டைம்ஸ் of இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் சுமார் 100,000 டன் அளவிற்கு அரிசியை இந்தியாவில் இருந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே சில இடர்பாடுகள் நிலவிய நிலையில் தற்போது நிலவும் இந்த வர்த்தகம் பெரிய அளவில் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமில்லை.