‘மலேசியாவிற்கு உதவ தயார்’ : ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பும் இந்தியா – கமருதீன் ஜாஃபர்

kamarudin jaffar

கொரோனா பாதித்துள்ள நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக மலேசியாவிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை விற்க இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இந்த தகவலை நேற்று துணை வெளியுறவுத்துறை அமைச்சர் கமாருடின் ஜாஃபர் தெரிவித்தார் என்று ‘தி ஸ்டார்’ என்ற செய்தி நிறுவனம் தான் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஹைட்ராக்ஸி குளோரோகுயின் உற்பத்தியாளராக இந்தியா தற்போது திகழ்கின்றது. அண்மையில் இந்த மருந்து, கொரோனாவிற்கு எதிரான போரின் மிக சிறந்த ஆயுதமாக செயல்படுகிறது என்று அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறினார்.

கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் கொரோனா பரவல் காரணமாகவும் இந்த மருந்து தங்களுக்கு அதிகம் தேவைப்படுவதாலும், இந்த மருந்தை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தியது. இந்நிலையில் மீண்டும் இந்திய இந்த மருந்தினை தன்னுடைய அண்டை நாடுகளுக்கும், கொரோனாவால் அதிகம் பதித்துள்ள நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு.
“ஏப்ரல் 14 அன்று, மலேசியாவிற்கு 89,100 மாத்திரைகளை இறக்குமதி செய்ய அனுமதி அளித்துள்ளது” என்று கமருடின் தெரிவித்தார்.

இந்தியாவிடம் இருக்கும் இருப்பை பொறுத்து மேலும் இந்த மாத்திரைகள் அந்நாட்டிடம் இருந்து பெற முயற்சி செய்து வருவதாகவும். இந்த மாத்திரைகளை மலேசியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மருத்துவர்களின் அறிவுரையோடு அளிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.