‘சட்டவிரோத வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..!’ – மஸ்ஜிட் இந்தியா வியாபாரிகள்

Masjid India

மலேசியாவில் புகழ்பெற்ற இடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது மஸ்ஜிட் இந்தியா. ஆரம்ப காலத்தில் இருந்தே இங்கு மக்கள் கூட்டம் எப்போதுமே அதிக அளவில் காணப்படும். மேலும் ஆரம்ப காலம் தொட்டே மிகவும் பிரபலமான இடமாக திகழ்கின்றது என்று மிபா எண்டு அழைக்கப்படும் மஸ்ஜிட் இந்தியா வர்த்தகர்கள் சங்கத்தினுடைய தலைவர் திரு. டத்தோ வீரா ஹாஜி அமீர் அலி மைடின் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவ தொடங்கிய காலத்திற்கு பிறகு கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து தற்போது மஸ்ஜிட் இந்தியா மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. மஸ்ஜிட் இந்தியாவை பொறுத்தவரை சுமார் 600 கடைகள் உள்ளன. பல்வேறு வகையான வியாபாரங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோவிட் தோற்று காரணமாக பல தொழில்துறைகள் தற்போது செயல்பட இயலாத காரணத்தினால் வியாபாரிகள் பலர் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் மஸ்ஜிட் இந்தியாவை சுற்றி உள்ள பகுதிகளில் சட்டவிரோத முறையில் சரியான உரிமம் இல்லாதவர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு யார் அனுமதி கொடுத்தது என்று தெரியவில்லை. ஆதலால் கோலாலம்பூர் மாநகர மன்றம் உடனடியாக இந்த பிரச்சினைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.