மலேசியாவிற்கு சட்டவிரோத குடியேற்றம் – 13 வெளிநாட்டு பெண்கள் கைது

malaysian illegal entry

கடந்த ஜனவரி 15ம் தேதி பல வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மலேசியாவில் உள்ள பெராக் மாநிலத்தில் ‘Immigration Department’ என்று அழைக்கப்படும் குடிவரவுத்துறையால்  நடத்தப்பட்ட சோதனையில் முறையான மாற்றும் தேவையான ஆவணங்கள் இல்லாமல் Jalan Datoh பகுதியில் உள்ள ஒரு உணவு விடுதியில் பணியாற்றி வந்த 13 வெளிநாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி, Kampar  மற்றும் Batang Padang உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆண்கள், பெண்கள் என்று இருபாலர்கள் உள்பட 35 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சட்டவிரோதமான முறையில், அங்கிருந்த விடுதிகளில் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் வியட்நாம், மியான்மர், இந்தோனேஷியா ,மற்றும் தாய்லாந்து நாட்டில் இருந்து மலேஷியா வந்திருப்பது கண்டுபிடிக்கபட்டது.

சரியான ஆவணக்கள் இன்றி இவர் எவ்வாறு மலேசியாவிற்குள் வந்தார்கள் என்று ஆய்வு செய்த போது இவர்களுக்கு உதவியதாக கருதப்படும் இரண்டு மலேசியர்களும் கைதாகி உள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மலேசிய குடிவரவு சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

அதே சமயம், இவர்களுடன் இவர்களுக்கு வேலை வழங்கியதாக கருதப்படும் மூன்று மலேசியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.