‘நான் விடைபெறுகிறேன்’ – ராஜினாமாவை அறிவித்த மலேசிய பிரதமர்

mahathir

கடந்த ஆண்டின் இறுதியில் இருந்தே மலேசிய நாட்டில் பல சிக்கல்கள் நிலவி வந்தன, குறிப்பாக அரசியல் களத்தில் பல சிக்கல்களை சந்தித்த டாக்டர். மகாதீர் பின் முஹமது அவர்களின் தலைமையிலான ஆட்சியில். மகாதீர் பின் முஹமது 10 ஜூலை 1925ம் ஆண்டு பிறந்தவர் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவத்தை கொண்ட அவர் உலகின் மிகவும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர்.

கடந்த சில காலமாகவே அவருடைய ஆட்சியின் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இடையில் இந்தியா விதித்த பாமாயில் தடை உளிட்டவை அவருக்கு பெரும் தலைவலியாக மாறியது. இந்நிலையில் நேற்று தான் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாகவும், அதற்கான ராஜினாமா கடிதத்தை மலேசிய அரசர் Al- SultanAbdullah Ri’ayatuddin அவர்களுக்கு அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 1981ம் ஆண்டு மலேசிய பிரதமராக பதவியேற்ற மகாதீர் பின் முஹமது சுமார் 22 ஆண்டுகள் கழித்து சென்ற 2003ம் அண்டு மலேசிய பிரதமர் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். மீண்டும் கடந்த 2018ம் ஆண்டு அவர் மீண்டும் மலேசிய பிரதமராக அவர் பதவி ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரதமரின் இந்த திடீர் முடிவு மலேசிய அரசியல் களத்தில் மிக பெரிய விஷயமாக பார்க்கபடுகிறது