மலேஷிய அரசியல் : ‘எனக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது’ – அன்வர் இப்ராஹிம்

anwar ibrahim

கடந்த 2018ம் ஆண்டு மலேசியாவில் நடந்த பொதுத்தேர்தலில், மகாதீர் முகமது அவர்களின் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியும், அன்வர் இப்ராகிமின் அவர்களின் மக்கள் நீதி கட்சியும் கூட்டணி வைத்து போட்டியிட்டு ஆட்சியையும் பிடித்தது. ஆட்சிக்கு வந்ததும், விரைவில் பிரதமர் பதவியை விட்டுத் தருவதாக, அன்வர் இப்ராகிமுக்கு, மகாதீர் வாக்குறுதி அளித்தார். ஆனால் மலேசிய பிரதமராக மகாதீர் பின் முகமத் அவர்களே தொடர்ந்த நிலையில் இரு கட்சி கூட்டணியில் அடிக்கடி மோதல் போக்கு நிலவியது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும் மகாதீர் முகமது மலேசிய அரசருக்கு கடிதம் ஒன்றை கொடுத்தார், அரசரும் அந்த கடிதத்தை ஏற்று அடுத்த பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும்வரை நீங்களே இடைக்கால பிரதமராக பதவி வகிக்கும்படி கூறினார். இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த இடைக்கால பிரதமர் மகாதீர், ”என்னை அனுமதித்தால், அனைவரையும் உள்ளடக்கிய அரசை அமைக்க, நான் முயற்சி எடுப்பேன் என்று கூறினார். மேலும் எனக்கு ஆதரவு இருந்தால் நான் மீண்டும் ஆட்சிக்கு வருவேன் என்றும், என்னையன்றி வேறு யார் வந்தாலும் அவர்களையும் நான் வரவேற்பேன் என்றும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வினை தொடர்ந்து இப்ராகிம் பேசுகையில், ”எனக்கு தற்போது மூன்று கட்சிகளிடம் இருந்து நல்ல ஆதரவு கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார்.