‘நான் பிரதமர் இல்லை’ – இனி காஷ்மீர் பிரச்னையை பற்றி தடையின்றி பேசுவேன் – மகாதீர் முஹமது..!

Mahathir Mohammed
Image tweeted by Mahathir Mohammed

இந்த ஆண்டின் தொடக்கத்தில் கோவிட் 19 பிரச்சனைக்கு முன்பு மலேசியா ஒரு மிகப்பெரிய அரசியல் பிரச்னையை சந்தித்தது என்றால் அது மிகையல்ல. கடந்த ஆண்டின் தொடக்கத்தில், மலேசியாவில் இருந்து பாயமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா அந்த பாமாயில் வர்த்தகத்திற்கு தடை விதித்தது. காஷ்மீர் பிரச்சனை குறித்தும் இந்தியாவில் அமலில் உள்ள இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் அப்போதைய மலேசியா பிரதமர் மகாதீர் கருத்து தெரிவித்ததால் தான் இந்த தடை விதிக்கப்பட்டது என்றும் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் அப்போது மலேசியாவின் மூத்த அரசியல்வாதியான அன்வர் இப்ராஹிம், தான் பிரதமர் மகாதீர் அவர்களுடன் இந்த பாமாயில் பிரச்சனை குறித்து பேசியுள்ளதாக தெரிவித்தார். விரைவில் டெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் பேசி வலுத்து வரும் இந்த பாமாயில் பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக நல்லுறவில் நீடித்து வரும் இந்தியாவும், மலேசியாவும் கண்டிப்பாக மீண்டும் இந்த வர்த்தகத்தையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பையும் விரைவில் சீர்செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் பல மாதங்கள் கழித்து தற்போது புதிய பிரதமர் மலேசியாவில் பதியேற்றுள்ள நிலையில் முன்னாள் பிரதமர் ஒரு கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில் “நான் பேசியதற்காக மன்னிப்பு கேட்கமாட்டேன், ஆனால் என்னுடைய வார்த்தைகளால் பாமாயில் வர்த்தகம் சிக்கலை சந்தித்தது வருத்தமளிக்கிறது. அநீதிக்கு எதிராக நான் கொடுத்த குரலுக்கு இவ்வளவு விலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று நான் நினைக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms