நான் ராஜினாமா செய்கின்றேன் – மலேசிய அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரி

tomy thomas

கடந்த ஆண்டு இறுதியில் இருந்தே மலேஷியா அரசியல் களத்தில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றது. இந்திய பாமாயில் பிரச்சனை, கொரோனா நோய் தொற்று பிரச்சனை என்று இந்த ஆண்டு மலேசியாவிற்கு குழப்பமான ஆண்டாகவே நகர்ந்து வருகின்றது. இந்நிலையில் மலேஷியா அரசியலில் திடீர் மாற்றமாக சில தினங்களுக்கு மும்பு மலேஷியா பிரதமர் தனது ராஜினாமா கடிதத்தை மன்னரிடம் கொடுத்தார். மன்னரும் அந்த கடிதத்தை ஏற்று கொண்டு அடுத்த பிரதமர் பதவி ஏற்கும் வரை மகாதீர் அவர்களே இடைக்கால பிரதமராக நீடிப்பார் என்று கூறினார்.

இந்நிலையில் அடுத்த நிகழ்வாக மலேசியவின் அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரியான டோமி தாமஸ் தற்போது தனது ராஜினாமா கடிதத்தை மன்னர் அறிவித்த மலேசியாவின் இடைக்கால பிரதமர் மகாதீர் பின் முகமது அவர்களிடம் நேற்று முன்தினம் கொடுத்துள்ளார். அவர் ஏன் தனது பதவியில் இருந்து விளங்குகிறார் என்பதற்கு எந்த பதிலும் இதுவரை அளிக்கப்படவில்லை. ஆனால் இடைக்கால பிரதமர் திரு. மகாதீர் அலுவலகத்தில் இருக்கும் காலத்தில் தான் பதவி விலக விரும்புவதாக டோமி தாமஸ் தெரிவித்தார் என்று ‘த எட்ஜ்’ என்ற செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

ஏறக்குறைய சுமார் 35 ஆண்டுகாலத்திற்கும் மேலாக சட்டத் துறையில் மிகுந்த அனுபவம் கொண்டவர் திரு. டோமி தாமஸ் என்பது குறிப்பிடத்தக்கது.