‘பிரதமரால் தனது நிலைப்பாட்டை எப்படி மாற்ற முடிகிறது..?’ – புசார் முக்ரிஸ் மகாதீர்

muhkriz mahathir

1MDB என்ற ஊழலுக்கு எதிராக முன்பு பிறரை நம்பவைத்த ஒருவர், தற்போது தனது நிலைப்பாட்டினை மாற்றி அம்னோ கட்சியை தற்போது ஆதரிக்க எப்படி முடிகிறது என்று தான் ஆச்சர்யப்படுவதாக கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதீர் தான் தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை அன்று இரவு அலோர் செட்டாரில் பெர்சத்து உறுப்பினர்களுடன் பேசிய கெடா மந்திரி புசார் முக்ரிஸ் மகாதீர், தற்போது பெர்சத்து கட்சியின்  தலைவராகவும் இருந்து வருகின்ற மலேஷியா பிரதமர் முகிதீன் யாசினால் தனது நிலைப்பாட்டை எப்படி மாற்ற முடிகிறது என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஒரு காலகட்டத்தில் 1MDB என்ற அந்த ஊழலில் ஈடுபட்டத்திற்காக மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை தற்போதைய மலேசியா பிரதமர் முகிதீன் அப்போது கடுமையாக சாடினார் என்று புசார் முக்ரிஸ் மகாதீர் கூறினார். மேலும் பேசிய அவர், மக்களாகிய நீங்களும் அந்த விடியோவை இணையத்தில் பார்த்திருப்பிர்கள், அந்த வீடியோவில் இருந்தது யார்..? அந்த 1 எம்.டி.பி தொடர்பாக தனிப்பட்ட ஒரு வாங்கி கணக்கில் அளவு குறிப்பிடப்படாத ஒரு பெரும் தொகையை அவர் வைத்திருந்தார் என்று குற்றம் சாடியதும் நமது பிரதமர் முகிதீன் தானே என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் பதவியில் இருந்து விலகி மன்னரின் ஆணைப்படி மலேசியாவின் இடைக்கால பிரதமராக இருந்தார், இந்நிலையில் அம்னோ மற்றும் பாஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நல்ல ஆதரவுடன் முகிதீன் மலேசியாவில் புதிய அரசாங்கத்தை அமைத்தார் என்றும் அவர் தெரிவித்தார்.