‘H1N1 பன்றிக்காய்ச்சல்’ – பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இறைச்சி இறக்குமதிக்குத் தடை..! – மலேசியா

swine flu
Photo Courtesy : sciencenews.org

சீனாவின் வுஹான் நகரில் ஒற்றை தொற்றாக தொடங்கி தற்போது உலக அளவில் கோடிக்கணக்கான தொற்றாக மாறியுள்ளது இந்த கோவிட் 19. இந்த பீதியே இன்னும் அடங்காத நிலையில் தற்போது அங்கு சுவைன் ஃப்ளு எனப்படும் பரவக்கூடிய பன்றிக்காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பன்றிக் காய்ச்சலுக்கு ஜி 4 என்று பெயரிட்டுள்ளனர்.

மேலும் கடந்த 2009ம் ஆண்டு பல நாடுகளுக்கு பரவிய H1 N1 நோயின் மரபணுவில் இருந்து இந்த புதிய ஜி 4 நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் அணைத்து நாடுகளும் தற்போது உசார்படுத்தப்பட்டுள்ளன. H1 N1 நோய் தொடர்புடைய நாடுகளில் இருந்து பன்றி இறைச்சி மற்றும் அது சார்ந்த பொருட்டாக்களை இறக்குமதி செய்ய மலேசியா தடை விதித்துள்ளது.

மேலும் உள்நாட்டில் செயல்பட்டு வரும் பண்ணைகளிலும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மற்றும் விவசாயம் உணவுத்துறை அதிகாரிகளும் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.