“மலேசியாவில் பிறநாட்டு பணிப்பெண்களை அனுமதிக்க வேண்டும்” – பொது சுகாதார மருத்துவ குழு

Servant Maids

அந்நிய நாடுகளை சேர்ந்த பணிப்பெண்கள், உலக அளவில் வீடுகள் மற்றும் காப்பகங்கள் போன்ற பல இடங்களில் பணிப்பெண்களுக்கான தேவை என்பது மிக அதிகமாகவே உள்ளது. ஒரு ஆய்வின் அடிப்படையில் இந்த ஆண்டு ஜனவரி தொடங்கி மே மாதம் முடிய சுமார் 3,40,395 இணைய வாயிலான விண்ணப்பங்கள் குடிநுழைவு இலாகாவிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலர் பணிப்பெண்களின் சேவை இல்லாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக கூறப்படுகிறது. தற்போது நிலவும் அசாதாரண சூழலில் பல நாடுகளின் எல்லைகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது,

இதையும் படிங்க : “3 ஆண்டுகளாக மலேசியாவில் சிக்கித்தவித்த இந்தியர்” – வந்தே பாரத் திட்டம் மூலம் தாயகம் திரும்பினார்..!

இருப்பினும் மலேசியா போன்ற நாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பொருளாதார நிறுவனங்கள் தொடர்ந்து இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பொது நடமாட்ட கட்டுப்பாட்டில் பல தளர்வுகள் விதிக்கப்பட்டிருப்பதால் பிற நாடுகளை சேர்ந்த பணிப்பெண்களை வேளைக்கு அமர்த்துவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் பொது சுகாதார மருத்துவ குழு தெரிவித்துள்ளது.

மேலும் தற்போது சிங்கப்பூர், தைவான் போன்ற நாடுகள் அந்நிய நாடு பணிப்பெண்களை வேளைக்கு அமர்த்த தற்போது அனுமதி அளித்திருப்பதாகவும் அந்த குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms