“மலேசியர்களுக்கான தனிமைப்படுத்துதல் கட்டணத்தை அரசே ஏற்கலாம்” – கோரிக்கை விடுத்த பிரபாகரன்..!

Prabhakaran
Image tweeted by Prabhakaran

கடந்த ஜூலை 21ம் தேதி மாலை செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஒரு புதிய தகவலை தெரிவித்தார். இதுவரை பிறநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்கள் தொற்று இல்லாதபட்சத்தில் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அணுமதிக்கப்பட்ட நிலையில் பலர் அதை மீறுவதாகவும், ஆகையால் இனி நாடு திரும்புவோர்கள் அரசு அனுமதிக்கும் நிலையங்களில் கட்டாய தனிமைப்படுத்துதலுக்கு உள்ளாக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும் இதற்கான கட்டணத்தினையும் அவர்கள் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு மலேசியா சுகாதார அமைச்சகம் தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த நடவடிக்கை கடந்த ஜூலை 24 2020 முதல் அமலில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மூத்த அமைச்சர் இஸ்மாயில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் வெளிநாட்டில் இருந்து மலேசியா திரும்பும் வெளிநாட்டவர்கள் 14 நாட்கள் அரசு அறிவிக்கும் நிலையங்களில் தனிமைப்படுத்துதலில் இருக்கும் நேரத்தில் அதற்கு கட்டணமாக 4700 ரிங்கிட் வரை செலுத்த நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தாயகம் திரும்பும் மலேசியர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் கட்டணமாக 2100 ரிங்கிட் செலுத்த வேண்டும் என்றும் மலேசியர்களுக்கு 56 சதவிகிதம் சலுகை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் ஏற்கனவே பல மடங்கு வினமான கட்டணங்கள் செலுத்தி நாடு திரும்புவோர் மீது அரசு இப்படிப்பட்ட ஒரு கட்டணத்தை திணிக்க கூடாது என்றும். வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் முறையை அரசு இன்னும் தீவிரமாக்க வேண்டும் என்றும் பக்காத்தான் ஹராப்பான் கட்சியின் பத்து தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா போன்ற நாடுகளில் வீட்டில் தனிமைப்படுத்த பட்டுள்ளோரை GPS கருவி மூலம் கண்காணிக்கபடுவதாகவும் அதை போன்ற விஷயத்தை மலேசியாவில் பயன்படுத்தலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அல்லது மலேசியர்கள் தனிமைப்படுத்துதல் மையத்தில் வைத்திருக்கும் செலவை அரசு ஏற்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms