நல்ல சிகிச்சையும், சுகாதாரமும் கொரோனாவை குணப்படுத்தும் – துணை பிரதமர் வான் இஸ்மாயில்

Wan ismayil

நியூ ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ் என்ற செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, நேற்று செய்தியாளர்களை சந்தித்த மலேசிய துணை பிரதமர், வெளிநாட்டவர்கள் மூலமாக அன்றி மலேசியாவில் இதுவரை தானாக யாருக்கும் கொரோனா நோய் தொற்று வரவில்லை என்றும்.

இதுவரை 17 பேர் இந்த நோய் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அண்மை காலமாக அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை காரணமாக இரண்டு பேருக்கு இந்த நோய் குணமடைந்து அவர்கள் வீட்டுக்கு திரும்பி உள்ளதாகவும் கூறினார்.

ஆகையால் நல்ல சிகிச்சையும், சுகாதாரமும் இருந்தால் கண்டிப்பாக இந்த கொரோனா நோய் தொற்றை குணப்படுத்தலாம் என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா என்பது சரிசெய்ய முடியாத நோய் அல்ல என்றும், மக்கள் சிறந்த சுகாதாரத்துடன் இருந்தால் கண்டிப்பாக இந்த நோய் தாக்காமல் பாதுகாத்துக்கொள்ளலாம் என்றும் கூறினார்.

ஹுபெய் மாகாணத்தின் தலை நகர் வுஹன் என்ற இடத்தில் இருந்து பரவியதாக கருதப்படும் இந்த நோய் தாக்கி இதுவரை சீனாவில் 800க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இருவது ஆண்டுகளுக்கு முன்பு சீனாவின் ஹாங் காங் நகரை தாக்கிய சார்ஸ் எனப்படும் நோய் தாக்கி சுமார் 700 இறந்ததும், தற்போது கொரோனா, சார்ஸ்சை மிஞ்சி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.