‘மூன்று மாதமாக ஊதியம் வழங்கவில்லை..?’ – போராட்டத்தில் இறங்கிய Konsortium நிறுவன ஊழியர்கள்..!!

konsortium express malaysia
Picture Courtesy : malaysiaindru.my

கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் வுஹான் நகரில் தோன்றிய அந்த ஒற்றை தொற்று இன்று உலகையே அச்சுறுத்தி வருகின்றது. வல்லரசு நாடுகள் எல்லாம் பொருளாதார ரீதியில் பெரும் அதிர்வை சந்தித்துள்ளது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் மலேசியாவிலும் அந்த நோயின் தாக்கம் பொருளாதார ரீதியாக பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதை நம்மால் பார்க்கமுடிகிறது.

நேற்றைய நிலவரப்படி மலேசியாவில் உள்ளூர் தொற்று ஏதும் இல்லை என்பது மிகப்பெரிய கூட்டுமுயற்சி என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மலேசியாவில் சுமார் 250க்கும் அதிகமான பாதையில் 1000க்கும் அதிகமான பேருந்துகளை இயக்கி வரும் ‘கொன்சார்டியம்’ என்ற பேருந்து நிறுவனத்தின் ஊழியர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

கடந்த 3 மாத காலமாக தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று அவர் அந்த போராட்டத்தின்போது தெரிவித்துள்ளனர். மேலும் மத்திய அரசு வழங்கும் மாநிலத்தையும் அந்த நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

நன்றி : ‘மலேசியா இன்று’ செய்தி நிறுவனம்