ஏழை எளிய மாணவர்கள் – மலேசிய தொடக்கப்பள்ளிகளில் இலவச காலை உணவு திட்டம்  

morning meals

மலேசிய பள்ளிகளில் பயில வரும் மாணவர்கள் பலர், உடல் குறைபாட்டுடனும் அதே சமயம் சில ஏழை எளிய மாணவர்களும் பயில வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்த விஷயத்தை கவனித்து வந்த அரசு தற்போது இதற்கு ஒரு நல்ல தீர்வினை கண்டுள்ளது.

ஏழை எளிய மாணவர்களும் உடல் ரீதியாக குறைபாடு உள்ள மாணவர்களும் இனம்காணப்பட்டு, அவர்களுக்கு பள்ளியில் சத்தான காலை உணவு வழங்கும் திட்டம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சுமார் 4000க்கும், மேற்பட்ட மாணவர்கள் பயனடைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த கல்வி துறை தலைமை இயக்குனர் அப்துல் ரஹீம் கூறுகையில், இந்த திட்டம் மலேசியாவில் தற்போது தொடங்கப்ப்டட்டது அல்ல, 1979ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம், சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருவதாக கூறினார்.

ஏழை மாணவர்கள் பசியோடு பள்ளியில் வகுப்பில் அமரும் போது அவர்களால் பாடங்களை எவ்வாறு கவனிக்க முடியும் ? ஆகையால் எந்த ஒரு குழந்தையும் பசியால் தவிக்ககூடாது என்பதற்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது என்று கூறினார்.

இதுவரை இந்த திட்டத்தால் சுமார் 517,000 மாணவர்கள் பயன் அடைந்துள்ளதாக தெரிவித்த அவர் இந்த திட்டத்திற்காக சுமார் 22 மில்லியன் ரிங்கட் (7.3 மில்லியன் டாலர்) ஒதுக்கப்படுள்ளதாக தெரிவித்தார்.

பெற்றோரின் மாத வருமானம் 3000 ரிங்கட்களுக்கும் குறைவாக இருப்பின் கண்டிப்பாக அவர்களுடைய குழந்தைகளுக்கு பள்ளியில் இந்த காலை உணவு வழங்கும் திட்டம் மூலம் உணவளிக்க வகைசெய்யப்படும் என்று கூறினார்.