ஆசிய நாடுகளை அச்சுறுத்தும் கொரோன – மலேசியாவில் நான்கு பேர் பாதிப்பு  

corona malaysia

இந்த ஆண்டின் தொடக்கமே பல இன்னல்களோடு தொடங்கியுள்ளது, அரசியல் குழப்பங்கள், பாமாயில் பிரச்சனை என்று எல்லாம் ஒருபுறம் இருக்க, தற்போது மலேசியா மட்டும் இல்லாமல் ஆசிய நாடுகள் அனைத்தையும் கலங்கடித்து வருகின்றது கொரோன..

கொரோன, இந்த வைரஸ் சீனா நாட்டினை பிறப்பிடமாக கொண்டு உருவெடுத்துள்ளது. ஆசிய நாடுகள் பலவற்றை அச்சுறுத்தும் ஒரு கொடிய நோயாக தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில் மலேசியாவில் நான்கு பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலேசிய நாடு சுகாதார துறை மந்திரி Dzulkefly Ahmad, சீனாவில் இருந்து கடந்த வாரம் மலேசியாவிற்கு வந்த எட்டு சுற்றுலா பயணிகளிடம் நடத்தப்பட மருத்துவ பரிசோதனையில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கும் அவருடைய இரண்டு பேரக்குழந்தைகளுக்கும் கொரோன பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர்கள் தற்போது தனிமை படுத்தப்பட்டு கோலாலம்பூரில் உள்ள Buloh மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியை சுகாதார துறை அமைச்சர் அறிவித்த சில மணி நேரத்திலேயே நான்காவதாக மற்றும் ஒருவர் இந்த கொரோன வைரசால் பாதிக்கபடுள்ளதாக சுகாதார துறை அதிகாரி நூர் ஹிசாம் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு குறித்து பேசியுள்ள மலேசிய நாட்டு பிரதமர் மகாதீர், இந்த நோய் பரவாமல் தடுக்க எல்லா முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றும், இதனால் சீன நாட்டு பயணிகளுக்கு மலேசியா வர எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். இருப்பினும் சீனாவில் இருந்து வரும் பயணிகள் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே மலேசியாவிற்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் அறிவித்துள்ளார்.