மலேசியாவில் கொரோனா – சிகிச்சை முடிந்து நால்வர் வீடு திரும்புகின்றனர்

Dzulkefly

மலேசியாவில், கொரோனா வைரஸால் கண்டறியப்பட்ட முதல், இரண்டாவது, மூன்றாவது மற்றும் ஐந்தாவது நபர்களாக கருதப்படும் நால்வரும் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்து வீடு திரும்பவுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்துக் செரி துல்கெஃப்ளை அஹ்மத் அறிவித்தார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து பரவ தொடங்கியதாக கருதப்படும் இந்த நோய் மலேசியாவிலும் பரவத்தொடங்கியது.  மலேசியாவில் பரவிய இந்த கொரோனா நோய் தொற்று காரணமாக சுமார் 19 பேர் மலேசியாவில் பாதிகப்படிருந்த நிலையில் அதில் நாலவர் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்ப உள்ளதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் இந்த நோய் தொற்றை எதிர்க்க உதவிய அனைத்து மருத்துவர்களுக்கும், அவர்களின் உதவியளர்களுகும் தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

ஹுபெய் மாகாணத்தின் தலைநகர் வுஹானில் உள்ள ஒரு இறைச்சி கடையில் இருந்து பரவியதாக கருதப்படுகிறது இந்த கொரோனா எனப்படும் வுஹான் வைரஸ். சீனா அரசும், உலக சுகாதார அமைப்பும் இந்த நோய் தொற்றை விரைந்த அழிக்க முழு முயற்சிகளை எடுத்துவருகின்றது. சீனாவில் இந்த நோய் தொற்றால் 1100க்கும் அதிகமானோர் இறந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன.