“மீண்டும் தொற்று உயர்கிறது” – எச்சரிக்கும் சுகாதார இயக்குனர் ஜெனரல்.!

Flatten the Cruve
Image Tweeted by Noor Hisham Abdulla

மலேசியாவில் மீண்டும் கொரோனா பரவளின் அளவு சற்று அதிகரித்து வருவதாக சுகாதார இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறியுள்ளார். (Flatten the Curve)

மக்கள் அனைவருக்கு சமூக அக்கறை நிரம்ப வேண்டும் என்று அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். (Flatten the Curve)

“இதுவரை 74000 பேருக்கு இரண்டு கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது” – மலேசிய அரசு.!

பொதுவெளியில் முகக்கவசம் அணிவது, முறையான சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்றவற்றை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வந்தாலும் மக்கள் விழிப்போடும் அக்கறையோடும் செயல்பட்டால் மட்டுமே கொரோனவை முற்றிலும் அளிக்க முடியும்.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 1359 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களின் எண்ணிக்கை என்பது 3,38,168 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1491 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 3,22,416 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று மட்டும் மலேசியாவில் 2 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். இதுவரை 1248 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram