COVID – 19 : மலேசியாவில் சோதனை நடத்த மேலும் ஐந்து புதிய ஆய்வகங்கள் – நூர் ஹிஷாம் அப்துல்லா

noor kisham abdullah

மலேசியாவில் பரவி வரும் கொரோனா தொற்றை தடுக்க பொது நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மறுபக்கம் மலேசிய முழுவதும் ஒரு நாளைக்கு சுமார் 11,500 பேருக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இது நோய் பரவலை தடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மேலும் ஐந்து புதிய ஆய்வகங்களைச் சேர்ப்பதன் மூலம் இன்னும் அதிக அளவு மக்களை சோதிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சுகாதார இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா, நாடு முழுவதும் 48 சோதனை சாவடிகள் இயங்கும் என்றும் இது சோதனையின் அளவை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் மலேசியாவில் 6500-க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எண்ணிய நிலையில் 5000-க்கும் குறைவான மக்களே பாத்திருப்பது நம்பிக்கையை தருவதாக அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே விதிக்கப்பட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடு நல்ல முறையில் பலன் அளித்துள்ள நிலையில், மூன்றாம் கட்ட பொது நடமாட்டக் கட்டுப்பாடும் சிறந்த முறையில் பலன் தரும் என்றும் பலரும் எதிர்பார்க்கின்றனர்.