‘மருத்துவமனையில் பெண்கள் வார்டில் தீ விபத்து’ – நேரில் சென்று ஆய்வு செய்த சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல்..!!

Pentilang Jaya
Image Tweeted by One News

பெட்டாலிங் ஜெயா பகுதியில் ஒரு மருத்துவமனையில் உள்ள பெண்கள் வார்டில் ஏற்பட்ட தீ விபத்து தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக யாரும் எந்த வித ஆபத்தும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. சுமார் 24 நோயாளிகள் அந்த வார்டில் இருந்த நிலையில் அவர்கள் அனைவரும் அங்கு பணியில் இருந்தவர்களால் உடனடியாக மீட்கப்பட்டனர்.

சம்பவம் நடந்த இடத்தை சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா பார்வையிட்டார். அதன் பிறகு அவர் வெளியிட்ட அறிக்கையில் “தீ விபத்து ஏற்பட்டது பிரதான கட்டிடத்தில் அல்ல, அது நடந்தது 20 ஆண்டு பழமையான வார்டில். இருப்பினும் இந்த இடம் இன்னும் பயன்பாட்டில் தான் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கப்படும் என்று நம்புகிறோம்”, என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்று மலேசியாவில் நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் இந்த தீ விபத்து சற்று பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.