செல்போன் கோபுரத்தில் ஏறிய ஊழியர் – 30 மணி நேரம் நடந்த போராட்டம்

indonesian guy

கடந்த திங்கள் அன்று (20.01.2020) காலை 7.30 மணியளவில் மலேசியாவின் மெமாலோவில் இருக்கும் புக்கிட் என்ற இடத்தில் உள்ள ஒரு உயரமான செல்போன் கோபுரத்தின் உச்சியில், ஆடவர் ஒருவர் ஏறி நிற்பதாக அங்குள்ள தீயணைப்பு படையினருக்கு தகவல் வந்தது.

தகவலறிந்ததும் உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்தனர் கனோவிட் தீயணைப்பு மற்று மீட்புப் படை அதிகாரிகள். முதலில் ஒரு போலீஸ் அதிகாரி மேல ஏறி அவரை கீழே வருமாறு கூறியுள்ளார், ஆனால் அந்த நபர் அவருக்கு செவிசாய்க்கவில்லை, அந்த ஆண் சற்று மனநிலை அழுத்தம் உள்ளவரை போல காட்சியளித்ததாக கூறப்படுகிறது.

அருகில் உள்ள ஒரு பனை எண்ணெய் நிறுவனத்தில் அவர் வேலை செய்ததும், அங்குள்ள சகா ஊழியர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் அவர் இந்த செல்போன் கோபுரத்தில் எறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

ஒரு போலீஸ் அதிகாரி பேச்சு வார்த்தை நடத்தியும் அவர் அந்த கோபுரத்தில் இருந்து இறங்க மறுக்கவே, விடிய விடிய தீயணைப்பு படையினர் அவரை கீழே விழாமல் கண்காணித்து வந்தனர். அடுத்தநாள் பிற்பகல் இந்த நிலை தொடரவே, இரண்டு தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி அளவில் மேலே சென்று அவரிடம் பேசினார்.

30 மணி நேரத்திற்கும் மேலாக அவர் கோபுரத்தின் உச்சியில் இருந்ததால் சற்று சோர்வுடன் காணப்பட்ட அவர் கீழ இறங்க சம்மதித்தார். அதன் பிறகு சுமார் 4 மணி அளவில் அந்த நபரை நல்லபடியாக கீழே இறக்கினர். உடனடியாக அவருக்கு மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

cell phone tower

விடிய விடிய அவரை காப்பாற்ற போராடிய போலீசார் மாற்றும் தீயணைப்பு படையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.