‘நாடாளுமன்ற அமர்வில் VAPING’ – வெளியுறவுத்துறை அமைச்சருக்கு விதிக்கப்பட்ட அபராதம்..!

hishammuddin hussein
Image tweeted by hishammuddin hussein

நாட்டின் மக்களின் பிரதிநிதிகளாக விளங்குபவர்கள் தான் மக்களால் நியமிக்கப்படும் அமைச்சர்கள். மக்களின் அபிமானத்தை பெற்றதால் தான் அவர்கள் ஆட்சி பொறுப்பில் அமர்கின்றனர் என்பது உலக அளவில் உள்ள நியதி. அவ்வரும் மக்களால் அமர்த்தப்படும் அமைச்சர்கள் மக்களுக்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இந்நிலையில் மலேசிய பாராளுமன்றத்தின் உறுப்பினரும் வெளியூரை துறை அமைச்சருமான ஹிஷம்முதீன் செய்த ஒரு தவறு தற்போது மக்களிடையே பெரும் அதிருப்தியை எழுப்பியுள்ளது.

அமைச்சர் ஹிஷம்முதீன் ஒரு காணொளிக்காட்சி நிகழ்வின்போது Vaping எனப்படும் மின்புகைபானை பயன்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தியபோது “என்னை மன்னித்து விடுங்கள், இது ஒரு புதிய பழக்கமாக என்னிடம் உள்ளது. இதற்காக நான் வருத்தப்படுகிறேன். இனி இந்த தவறு நடக்காது என்றும் தெரிவித்துள்ளார்.”

மேலும் அமைச்சர் ஒருவர் இவ்வாறு செய்வது தவறும் என்றும், ஒரு அமைச்சர் மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும் என்று பல ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்த அவர் தற்போது வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “நான் செய்தது தவறு என்பதை நான் உணர்கிறேன். அனைவருமே சட்டத்திற்கு உள்பட்டவர்கள் தான். நான் செய்த இந்த விஷயத்திற்கு அரசு அபராதம் விதித்துள்ளது. நிச்சயம் அதற்கான அந்த அபராதத்தை நான் செலுத்திவிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms