‘இஸ்லாமியர்கள் அல்லாத பிற மத வழிபட்டு தளங்களை திறக்கலாம்..!!’ – இஸ்மாயில் சப்ரி யாக்கோப்

ismayil sabari

மலேசியாவில் மே மாத தொடக்கத்தில், நிலவி வந்த இயக்கக் கட்டுப்பாட்டில் சில தளர்வுகள் அறிவித்து அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் மலேசியாவில் உள்ள 80-க்கும் அதிகமான தொற்று முற்றிலும் இல்லாத பச்சை மண்டலங்களில் உள்ள இந்து கோயில்கள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் நேற்று வெளியானது. இந்நிலையில் இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதம் சார்ந்த வழிபட்டு தளங்கள் வரும் ஜூன் 10ம் தேதி முதல் திறக்கப்படும் (பச்சை மண்டலங்களில் மட்டும்) என்று மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறியுள்ளார்.

இந்நிலையில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிபட்டு தளங்களில் 12 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் தன் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும். வழிபட்டு தளங்களுக்குள் நுழைபவர்கள் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு கிருமி நாசினி கொண்டு கைகள் சுத்தப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வாரத்தில் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டுமே வழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்றும், கிறிஸ்தவ தேவாலயங்கள் ஞாயிறு அன்று மட்டுமே திறக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் திருமணம் போன்ற நிகழ்வுகளை வழிபாட்டு தளங்களில் நடத்தக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.